Advertisment

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்... ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்கிறார் ரஜினி...!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வரும் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக விலக்கு கேட்டு நடிகர் ரஜினிகாந்த் மனுதாக்கல் செய்துள்ளார்.

Advertisment

Thoothukudi issue - Rajinikanth

2018-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அங்கு நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்ட் ரஜினி, "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சில சமூக விரோதிகளே காரணம். போலீஸை மட்டும் குறை கூறுவது தவறு" என பேட்டி அளித்தார்.

துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி அருணா ஜெததீசன் ஆணையம், அந்த பேட்டி குறித்து 25-ஆம் தேதி நேரில் ஆஜராகி ரஜினி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பியது. இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராக விலக்கு கேட்டு அருணா ஜெகதீசன் ஆணையத்தில் ரஜினி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ரசிகர்கள் அதிகளவில் கூடினால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். எனவே நான் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கான கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் அதற்கு பதில் தர தயாராக இருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

Sterlite plant rajinikanth Thoothukudi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe