Advertisment

கொடைக்கு நன்றி கடன்.. தூத்துக்குடி துப்பாக்கி சூடா? சந்தேகம் கிளப்பிய சீதாராம் யெச்சூரி

yechury

மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக மக்களுடன் இணைந்து பேராடும் அரசியல் கட்சிகள் மீது எல்லாம் வழக்குகள் பாய்ந்து வரும் நிலையில் திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் தழுவிய அளவில் ‘போராடுவோம் தமிழகமே” என்கிற தலைப்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி ஆளும் மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை மணியை அடித்தனர்.

Advertisment

தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழகம் முழுவதும் இருந்து ‘போராடுவோம் தமிழகமே‘ என்ற தலைப்பில் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வந்தனர். இந்த பிரச்சார பயணம் திருச்சியில் முடிவடைந்து திருச்சி தென்னூர் உழவர்சந்தை திடலில் நிறைவு பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

கூட்டத்துக்கு திருச்சியை சேர்ந்த மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இன்றைய காலகாட்டத்தில் நாட்டுக்கு தேவை தலைவர்கள் அல்ல. நல்ல கொள்கைதான். அடுத்து வருகிற தேர்தலில் மோடி வருவாரா? அல்லது எந்த தலைவர் வருவார் என யோசிக்காமல் எந்த கொள்கையை அரியணை ஏற்ற வேண்டும் என்பதைத்தான் மக்கள் சிந்திக்க வேண்டும்.

yechury

ஜி.எஸ்.டி. வரிமுறையை அமல்படுத்தியதால் சிறு, குறு தொழில்கள் பாழ்பட்டு விட்டது. கோடிக்கணக்கானவர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு விட்டது. இதை மாற்ற மத்திய அரசு ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு, மாற்றுக்கொள்கையுடையவர்களை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லுமா? செல்லாதா? என்பதில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர். இறுதி தீர்ப்பு அடிப்படையில்தான் தமிழகத்தில் உள்ள ஆட்சி நீடிக்குமா? நீடிக்காதா? என சொல்ல முடியும். தமிழக அரசை ‘ரிமோட்’ மூலம் மோடி இயக்குகிறார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை பலி எடுத்திருக்கிறார்கள். இது மிகவும் கொடுமையானது காவலர்கள் பயன்படுத்திய துப்பாக்கி சைலன்சர் வகை துப்பாக்கி ஆகும். அதாவது சுட்டால் சத்தம் வராது. போராட்ட பதற்றத்தில் இருந்து கூட்டத்தை கலைப்பதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை. சாதாரண மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது என்பது, உயர்மட்ட உத்தரவு இல்லாமல் நடந்திருக்க வாய்பே இல்லை.

துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னால் ஒரு எச்சரிக்கைகூட விடப்படவில்லை. இந்த துத்துக்குடி ஆலையின் அதிபர் வேதாந்தா காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகளுக்கு வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கில் நிதி உதவி அளித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவு தொகை கைமாறியுள்ளது. இதை வாங்கிக்கொண்டே பிஜேபி அரசு சத்தம் இல்லாமல் வாங்கிக்கொண்டு அதற்கு நன்கொடையாக தான் துப்பாக்கி சூடு நடத்தி நன்றிகடன் செலுத்தியுள்ளதோ என்கிற சந்தேகம் எழுகிறது.

car

ஒருவேளை இதில் மத்திய ஆட்சியாளருக்கு தொடர்பு இருக்குமேயானால், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூலம் ஆழமாக விசாரணை நடத்தப்பட்டால் துப்பாக்கிசூடுக்கு உத்தரவு எங்கிருந்து வந்தது என்பது தெளிவாகும்.

பிரதமர் மோடி உடற்பயிற்சி வீடியோ வைரலாகி வருகிறது. அவர் நலமாக இருக்கட்டும். விலைவாசி என்கிற அரக்கன் மூலம் மக்கள் தலையில் இறங்கினால் மக்கள் எப்படி ஆரோக்கியமாக இருப்பார்கள். மோடியின் உடல் நலன் மட்டும் தான் முக்கியமா என்பதை மக்களாகிய நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

வங்கிகளின் வாராக்கடன் தொகையான ரூ.11.5 லட்சம் கோடியானது பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கியது தான். அந்த தொகையை வட்டியுடன் திரும்ப பெற்றாலே நாட்டில் கல்வி, ஆரோக்கியம் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கிட முடியும். இந்தியாவில் வலுவான போராட்டம் மூலமாக தான் மாற்றத்தை உருவாக்க முடியும்.

பல மாநிலங்களில் கொல்லைபுறமாக ஆட்சி அமைக்கிறது. இதற்கு மணிப்பூர் உள்ளிட்ட பல மாநிலங்களை சொல்லாலம். மத்திய அரசுக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் பிஜேபி அரசு தங்கள் கட்சிக்கு பல ஆயிரம் கோடிகள் நிதி வந்தாக கணக்கு காண்பித்துள்ளது. அந்த ஆவணங்களில் கட்சியின் பொருளாளர் கையெழுத்தே இல்லை. இது வரை தேர்தல் கமிஷன் அதை பொறுப்படுத்தவே இல்லை. இதே நேரத்தில் மிகவும் மதிக்ககூடிய நீதிதுறையிலே மோடி அரசு பல அழுத்தங்கள் கொடுத்ததை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளே தெரிவித்துள்ளனர்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

ஜாதி ரீதியான அடக்கு முறைகளுக்கு எதிர்ப்பு போராடி இந்தியாவிலே முன்மாதிரி மாநிலமாக தமிழகம் உள்ளது. தனது மோசமான ஆட்சியினால் அனைத்து துறைகளிலிலும் இந்த மோடி அரசு வலுவிழக்க செய்து விட்டது. இதன் மூலம் சமூகநீதி சீர்கேடு ஏற்பட்டுவிட்டது. நாட்டை முன்னேற்ற பாதைக்கு சென்று நீதியை மீட்க வேண்டும். இதற்கு மாற்று கொள்ளையை உருவாக்கி அனைவரும் ஓரணியில் திரண்டு பாரதீய ஜனதா அரசும், மாநில பினாமி அரசும் அகற்றப்பட வேண்டும். சாதீய கொடுமைகளுக்கு எதிராக போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று பேசினார்.

yech

மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், “தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து வருகிற ஜூலை 2-ந் தேதி ரெயில் நிறுத்த போராட்டம் நடத்தப்படும். மறுநாள் ஜூலை 3-ந் தேதி சேலத்தில் பெண்கள் சிறப்பு மாநாடு நடத்தப்படும்” என்றார்.

கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி ஆகியோரும் பேசினர். கூட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., முன்னாள் எம்.ல்.ஏ. சவுந்தரராஜன், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டெல்லியில் அய்யக்கண்ணு தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த சீதாராம்யெச்சூரி மற்றும் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

sterlite protest Sitaram yechury
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe