ADVERTISEMENT

தூத்துக்குடி துப்பாக்கி சூடு;தொடங்கியது சிபிஐ விசாரணை!!

12:32 PM Oct 14, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நடந்த வன்முறையில் 13 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தனர்.

சிபிசிஐடியிடம் இருந்த இந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமான வழக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி சென்றுள்ள சிபிஐ எஸ்பி.சரவணன், டிஎஸ்பி ரவி ஆகியோரின் தலைமையிலான குழு வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொண்டு விசாரணையை தொடங்கினர்.

துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி வழங்கிய வட்டாட்சியர் சந்திரன், துணை வட்டாட்சியரான சேகர் மற்றும் கன்ணனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

வன்முறை நடந்த இடங்கள், கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு சிபிஐ குழு நேரில் சென்று ஆய்வு நடத்தியது. மேலும் மூன்று நாட்கள் தூத்துக்குடியில் தங்கி வன்முறை நடந்த தினத்தில் பணியில் இருந்த காவலர்கள், அரசு பணியாளர்களையும் விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT