/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/modi 3001.jpg)
மத்திய அரசின் 4 ஆண்டு கால சாதனை விளக்க கருத்தரங்கு கோவையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் மத்திய தகவல் ஒலிபரப்பு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரி ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் பங்கேற்று பேசினார்.
பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்தும் பேசினார். அப்போது அவர், ''தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இது பற்றிய அனைத்து தகவல்களும் பிரதமர் மோடிக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவர் நடந்த சம்பவம் முழுவதையும் கேட்டறிந்து வேதனை அடைந்தார்'' என கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து வெளிப்படையாக எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. மோடி வேதனை அடைந்ததாக இந்த மந்திரி கூறுவது நாடகம் என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்கின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)