ADVERTISEMENT

தூத்துக்குடி: விஷவாயு தாக்கி நான்கு பேர் மரணம்!

09:24 AM Jul 03, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடி அருகே செப்டிக் டேங்கைத் துப்புரவு செய்வதற்காக இறங்கிய நான்கு பேர் விஷவாயு தாக்கி மரணமடைந்தது மாவட்டத்தைப் பதற வைத்திருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் அருகேயுள்ள செக்காரக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலப் பெருமாளின் மகன் சோமசுந்தரம் (62). இவர் பணி ஓய்வு பெற்ற தலைமைக் காவலர். தன் வீட்டிலுள்ள செப்டிக் டேங்கைத் துப்புரவு செய்யும் பொருட்டு நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் மற்றும் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜ் (17) பாண்டி (28) பாலா (20) சுரேஷ் (19) ஆகிய நான்கு பேர்களை ஏற்பாடு செய்து வரவழைத்திருக்கிறார்.

நேற்று (02/07/2020) காலை அவர்கள் 12.00 மணியளவில் செப்டிக் டேங்கைத் துப்புரவு செய்வதற்காக ஒருவர் பின் ஒருவராக நான்கு பேர்களும் உள்ளே இறங்கியிருக்கிறார்கள். வெகு நேரமாகியும் அவர்கள் வராமல் போகவே, உடனே தூத்துக்குடி தீயணைப்புப் படையினருக்குத் தகவல் போய் அவர்கள் வந்து உரிய உபகரணங்களுடன் மீட்ட போது, செப்டிக் டேங்க்கினுள்ளே கிளம்பிய விஷவாயுவால் தாக்கப்பட்டு நான்கு பேரும் மரணமடைந்தது தெரிய வந்திருக்கிறது.

தகவலறிந்து வந்த புதுக்கோட்டை போலீஸ் ஆய்வாளர் சரவணப் பெருமாள் தலைமையிலான போலீசார் நால்வரின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை மேற்கொண்டிருக்கிறார். சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விஷவாயு தாக்கி நான்கு பேர்கள் பலியானது சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT