Published on 01/02/2021 | Edited on 01/02/2021

ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) சரக்கு வாகனம் ஏற்றிக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு கொற்கையில் ரோந்து பணியில் இருந்தபோது, போதையில் சுற்றிய நபரை திட்டி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் சரக்கு வாகனத்தை எடுத்து வந்து எஸ்.ஐ. பாலுவை கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையின் உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும், எஸ்.ஐ. பாலுவை வாகனம் ஏற்றிக் கொலை செய்த நபரை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையின் வட்டார தகவல்கள் கூறுகின்றன.