thoothukudi district sterlite plant supereme court

மூடப்பட்டுள்ளஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

Advertisment

அந்த மனுவில் “தூத்துக்குடி மாவட்டத்தில் மூடப்பட்டு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரித்து அதை இலவசமாக வழங்க அனுமதி வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்திக் கூடத்தில் நாள் ஒன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

thoothukudi district sterlite plant supereme court

Advertisment

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ள சூழலில், இலவசமாக அதனைத் தர ஸ்டெர்லைட் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.