/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajini kanth 456333.jpg)
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் சித்ரவதைச் செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "தந்தையும், மகனையும் சித்ரவதைச் செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தபட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது. சத்தியமா விடவே கூடாது." என்று குறிப்பிட்டுள்ளார்.
Follow Us