thoothukudi district sathankulam father and son incident cbi court

Advertisment

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசாருக்கு எதிராக சி.பி.ஐஅதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.

மதுரை மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.ஐஅதிகாரிகள் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். அதில், '9 போலீசார் மீதும்கொலை, கூட்டுச்சதி உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சித்ரவதைச் செய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஜூன் 22, 23- ஆம் தேதிகளில் அடுத்தடுத்து சிறையில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது' எனக் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உயிரிழந்த நிலையில் கைதான 9 போலீசாருக்கு எதிராக சி.பி.ஐகுற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.