THOOTHUKUDI DISTRICT ES TAMILNADU GOVERNMENT ORDER

Advertisment

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமாரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் தூத்துக்குடி எஸ்.பி. அருண் பாலகோபாலனைக் கட்டாயகாத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் ஓய்வு பெறுவதால், புதிய ஐ.ஜி.யாக எஸ்.முருகனை தமிழக அரசு நியமித்துள்ளது. தென் மண்டல ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.முருகன், பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றியவர்.

சாத்தான்குளம் தந்தை- மகன் மரண விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து தூத்துக்குடி எஸ்.பி. மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.