தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு லதா என்பவர் போட்டியிடுகிறார். இதனால் லதாவின் கணவர் மாசாணசாமி மேட்டூர் என்ற இடத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடி மையத்தில் முகவராக இருந்தார். இந்நிலையில், இன்று (30.12.2019) மாலையில் வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்தில் மாசாணசாமியிடம் எதிர் தரப்பு வேட்பாளரான இளையராஜா தரப்பை சேர்ந்தவர்கள் தகராறு செய்துள்ளனர். அப்போது, அங்கிருந்தவர்கள் அவர்களை வெளியேற்றிவிட்டனர்.

Advertisment

thoothukudi district local body election incident police investigation

வெளியே வந்த அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மாசாணசாமியின் ஆதரவாளர்களான ஜேசுராஜ், ராமசாமி ஆகியோர் மீது எதிர் தரப்பை சேர்ந்தவர்கள் கொலை வெறித்தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

thoothukudi district local body election incident police investigation

இதற்கிடையே, ஒட்டப்பிடாரம் மருத்துவமனை அருகே நடந்து சென்ற மாரியப்பன் என்பவரை, ஒரு கும்பல் கல்லால் அடித்து கொலை செய்துள்ளது. மாரியப்பன் இந்த தேர்தலின்போது, இளையராஜாவுக்கு ஆதரவாக வேலை பார்த்துள்ளார். அதனால், மாசாணசாமியின் ஆதரவாளர்கள் அவரை அடித்து கொலை செய்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.