Advertisment

முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த விபரீதம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது புங்கவர்நத்தம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்தின் மனைவி மாரியம்மாளுக்கும் எதிர்வீட்டு ராமமூர்த்திக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இது அரசல் புரசலாக சண்முகத்தின் காதிலும் விழ, மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், அவர் கேட்கவில்லை.

Advertisment

thoothukudi district illegal connection husband police investigation

நேற்றிரவு (15/02/2020) தனது வீட்டின் ஒரு அறையில் சண்முகம் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை பக்கத்து அறையில் வித்தியாசமான 'சத்தம்' கேட்டிருக்கிறது. எழுந்து வந்து பார்த்தபோது, மனைவி மாரியம்மாள்- ராமமூர்த்தியுடன் கட்டிலில் 'தனிமையில்' இருந்திருக்கிறார். இதனால், கோபம் அடைந்த சண்முகம், அரிவாளை எடுத்து வீச இருவரின் உடலிலும் இருந்து உயிர் பிரிந்து போனது.

thoothukudi district illegal connection husband police investigation

Advertisment

இதையடுத்து, போலீஸாருக்கு தகவல் சென்றது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பசுவந்தனை போலீஸார், 2 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். "பலமுறை அவகிட்ட இதெல்லாம் வேணாம்னு சொன்னேன். அவனிடமும் சொன்னேன். அவங்க கேட்கலை. அதானாலயே ரெண்டு பேரையும் வெட்டி பொலி போட்டுட்டேன்" என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார் சண்முகம்.

Police investigation husband illegal connection Thoothukudi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe