thoothukudi district father and son incident tamilnadu human rights commission notice

Advertisment

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிளை சிறையில், விசாரணை கைதியாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர், போலீஸ் காவலில் இறந்தது தொடர்பாக நாளிதழ் ஒன்றின் நெல்லை பதிப்பு மற்றும் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.

அந்தச் செய்திகளின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள்ஆணையம் தாமாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. ஆணைய பொறுப்பு தலைவரான துரை. ஜெயச்சந்திரன் இந்த சம்பவம் குறித்து, தமிழக உள்துறை முதன்மை செயலாளரும், சிறைத்துறை கூடுதல் டிஜிபி-யும் நான்கு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு டிஜிபி-யும், இதுதொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டு, உரிய ஆவணங்கள் மற்றும் சிசிடிவி பதிவுகளுடன் விரிவான அறிக்கையை 8 வாரத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.