தந்தை, மகன் இறப்பு: தி.மு.க. சார்பில் ரூபாய் 25 லட்சம் நிதி!

thoothukudi district father and son incident dmk announced fund

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை, மகனின் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் ரூபாய் 25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனாவை விட கொடூரமான முறையில் தமிழக காவல்துறை நடந்து கொண்டுள்ளது. தந்தை, மகனை உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீஸார் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மிருகத்தனமாகக் கொடுமைப்படுத்தி உயிர் பறிக்கப்பட்டதை தாயும், சகோதரியும் வேதனையோடு கூறுகின்றனர்.

மனிதத்தன்மையற்ற கொடூரச் செயலில் ஈடுபட்ட, துணை நின்றவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும். உயிரிழந்த தந்தை, மகனின் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் ரூபாய் 25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். குடும்பத்திற்குத் தேவையான அனைத்துச் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும் தி.மு.க. துணை நிற்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

incident police Thoothukudi
இதையும் படியுங்கள்
Subscribe