Advertisment

தூத்துக்குடி ஆட்சியர்,  எஸ்.பி. மாற்றம்!

ve

தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி நிர்வாகத்தை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரனும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக முரளி ரம்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி எஸ்.பி. மகேந்திரன் சென்னையில் போக்குவரத்து துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் 11 பேர் சுட்டுக்கொல்லப்பட காரணமாக இருந்தவர் மகேந்திரன் என பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

Advertisment

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை முறையாக கையாளாததால் ஆட்சியர் மற்றும் எஸ்.பி. இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

collector SB Change Thoothukudi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe