காவல்நிலையம் அருகே வழக்கறிஞர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு வயது 40. பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். இந்த நிலையில், கடந்த 2005ஆம் ஆண்டு தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளத்தில் ஆத்திபழம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த சிவக்குமார், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக சென்றபோது கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்நிலையம் அருகே வழக்கறிஞர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-08/thoothukudi_-_advocate_-_04.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-08/thoothukudi_-_advocate_-_01.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-08/thoothukudi_-_advocate_-_05.jpg)