Advertisment

போலீஸ் விசாரணைக்கு சென்று வந்தவர் தற்கொலை!

கடலூர் மாவட்டம், தொழுதூர் அருகேயுள்ள கீழக்கல்பூண்டி கிராம அய்யனார் கோயில் அருகே வடக்கராம்பூண்டியை சேர்ந்த அமுதவேல் என்பவரின் மனைவி கருப்பாயி என்பவர் கடந்த 01.08.2020 அன்று அரை நிர்வாணமாக மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து ராமநத்தம் காவல்துறையினர் வழக்கு பதிந்து கள்ளக்காதலால் அடித்து கொலை செய்யப்பட்டாரா,தற்கொலை செய்துகொண்டரா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Advertisment

இவ்வழக்கு குறித்து வடக்கராம்பூண்டி கிராமத்தை சேர்ந்த தங்கராசு மகன் மணி என்பவரை விசாரணைக்காக காவல் துறையினர் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

இந்நிலையில் மணி நேற்று காலை தனது வீட்டில்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மர்மமான முறையில் இறந்த பெண்ணுடன்தொடர்புடைய வழக்கில் விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட மணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால், காவல் நிலைத்தில் துன்புறுத்தப்பட்டாராஅல்லது மனஅழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டாராஎன்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் எழும்புவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.மேலும் இதுகுறித்து ராமநத்தம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Cuddalore incident Police investigation
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe