Thol. Thirumavalavan

Advertisment

பெரியார் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பலர் மரியாதை செய்தனர். இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசப்பட்டது.

பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அக்கட்சியினர் பெரியார் சிலையை அவமதித்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் பெரியார் பற்றி இழிவாக பேசிய ஹெச்.ராஜாவையும் கைது செய்ய வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.

Advertisment

jagadesan

ஜெகதீசன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதை அடுத்து காலணி வீசியவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் ஜெகதீசன் என்பதும், வழக்கறிஞராக உள்ள அவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். பெரியாரை அவமதித்தது ஒட்டு மொத்த தமிழக மக்களை இழிவுபடுத்தும் செயல் என்றார்.