/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thol-art.jpg)
ம.தி.மு.க. உட்கட்சித் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கிளைக் கழகம் முதல் மாநிலத்தலைமை வரையிலான பதவிகளுக்குத்தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில் மதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு வைகோ, முதன்மைச் செயலாளர் பதவிக்கு துரை. வைகோ உள்ளிட்ட பலரும்பல்வேறு பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து வைகோவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்களும் வாழ்த்துகளைத்தெரிவித்து இருந்தனர்.
அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் நேற்று மதிமுகவின்பொதுச் செயலாளர் வைகோ வீட்டிற்குச் சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து திருமாவளவன்செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் 43 ஆயிரம் கோவில்கள்இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில்களில் எல்லாம் ஒரு ஆதிதிராவிடர், ஒரு பெண் இருக்கும் வகையில் அறங்காவலர் குழு இருக்கும் வகையில் நியமிக்கப்பட வேண்டும் என சட்டம் உள்ளது. அதனைஅரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் இந்து சமய அறநிலையத்துறைசட்டங்களையும் அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும்.” எனத்தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)