Skip to main content

 தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் - திருமாவளவன்

Published on 20/04/2019 | Edited on 20/04/2019

 

ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் வரும் 24-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். 


அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
 

தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் மாபெரும் வெற்றி பெறும். அதேபோல் 18 தொகுதிகளில் நடத்தப்பட்ட இடைதேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும். 
 

thol.thirumavalavan


 

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதே வன்முறையை தூண்டும் வகையில் அமைந்திருந்தது. தர்மபுரி உட்பட பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடியை கைப்பற்ற திட்டமிட்டனர். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராம வாக்கு சாவடியில் வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.
 

மேலும் பா.ம.க.வினர் பானை சின்னத்தை போட்டு உடைத்தனர். ஆதிதிராவிடர் பகுதிக்குள் நுழைந்து பானை சின்னம் போடப்பட்ட வீடுகளை உடைத்து சேதப்படுத்திருந்தனர். 10-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளன.





 

பத்திரிகையாளர்கள் யார்? என்று தெரியாமல் தாக்கியுள்ளனர். அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பத்திரிகையாளரை பார்த்து ஆறுதல் கூறி வந்துள்ளேன். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இது கண்டனத்துக்குரிய செயலாகும்.
 

அரசும், காவல் துறையும் மெத்தனம் காட்டி வருகின்றது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரத்திலும் வருகின்ற 24-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்? - தொல். திருமாவளவன் எம்.பி. கேள்வி

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Thol.Thirumavalavan says Does the Governor say that others who do not wear Poonul are disgraceful?

 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் நந்தனார் குருபூஜை விழா இன்று நடைபெற்றது. இதற்காக நேற்று இரவு கடலூர் வந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். இந்த குருபூஜை விழா முடிந்த பிறகு, 100 பட்டியலினத்தவர்களுக்குப் பூணூல் அணியும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். 

 

அதில் பேசிய அவர், “தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், குற்றச் செயல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும், தமிழகத்தில் அதிகபட்சமான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதே இல்லை” என்று பேசியிருந்தார். 

 

இதற்கிடையில், 100 பட்டியலினத்தவர்களுக்குப் பூணூல் அணிவிப்பது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் அவர், “நந்தனார் பிறந்த ஊர் ஆதனூரில் 100 பட்டியலினத்தவர்களுக்குப் பூணூல் அணிவிக்கிறாராம் ஆளுநர் சனாதனி ஆர்.என். ரவி.  

 

இது மேன்மைப்படுத்துகிறோம் என்னும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதாகும். இதுதான் சனாதனம் ஆகும்.  இதன்மூலம் பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்? பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களை கோவில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர்? அத்துடன், ஆளுநர் நந்தன் வழிபட்டதால் நடராசர் கோவிலில் அடைக்கப்பட்டுள்ள சுவரைத் தகர்த்து வாசலைத் திறந்து விட வேண்டுகிறோம். நாடாண்ட மன்னன் நந்தனை மாடு தின்னும் புலையன் என இழிவுபடுத்தும் பெரிய புராணக் கட்டுக் கதைகளைப் புறந்தள்ளுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

Next Story

அதிமுகவுடன் விசிக கூட்டணியா? - சங்கத்தமிழன் விளக்கம்

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

 Sangathamizhan | Annamalai | Jayakumar | ADMK

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அரசியல் களச் செயற்பாட்டாளர் சங்கத்தமிழன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

பாஜகவுடனான கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதற்கு திருமாவளவன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தது அரசியல் நோக்கத்திற்கு அல்ல. இது தமிழ்நாட்டில் பெரிய சமூக மாற்றத்தை உருவாக்கவே வி.சி.க முயன்று வருகிறது. மேலும், பாஜக, பா.ம.க கட்சிகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் வி.சி.க இடம்பெறாது என்பதனை நிரூபித்துக் காட்டியவர் திருமாவளவன். எனவே, வாழ்த்து தெரிவிப்பதனால் வி.சி.க, - அ.தி.மு.க உடன் கூட்டணி வைக்கும் என தீர்மானிக்கக் கூடாது. இன்றைக்கு எதிர்க்கட்சி ‘இந்தியா’ கூட்டணி உருவாவதற்கு தொடக்கம் முதல் குரல் கொடுத்தவர் திருமாவளவன் தான். 

 

அதனால் அறிஞர் அண்ணாவை விமர்சிப்பது எல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இதை பரப்பிய அண்ணாமலை பொய் சொன்னதில்லை என சொல்கிறார். ஆனால், அவர் இதற்கு முன் 20,000 புத்தகம் படித்தேன் எனவும் பாரதிராஜா கட்சி என மாற்றியெல்லாம் கூறியுள்ளார். எனவே, அண்ணாதுரை அவ்வாறு பேசியுள்ளதாக அண்ணாமலை முழுக்க முழுக்க திட்டமிட்டு வெறுப்பரசியலை பரப்புகிறார். இதற்கு காரணம் அதிமுகவிற்கு இருக்கும் முக்குலத்தோர் வாக்குகளைப் பிரிக்கவே இது போன்று பரப்புகிறார். இவர் சொல்வது போலெல்லாம் அண்ணாதுரை இல்லை. இந்தியாவிற்கே அண்ணாதுரை சிறந்து விளங்கியவர். அன்றைக்கே ஆரிய மாயை புத்தகம், இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி என்றெல்லாம் குரல் கொடுத்தவர் அண்ணாதுரை. அண்ணாமலை அறிஞர் அண்ணாவுடன் சேர்த்து, பாஜகவை எதிர்த்த ஜெயலலிதாவையும் சேர்த்து அவமானப்படுத்துகிறார். மேலும், அண்ணாமலை என்பவர் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர் தான். அ.தி.மு.க.வின் இந்த முடிவை நான் உண்மையாக பாராட்டுகிறேன். 

 

அதிமுகவின் தலையில் உட்கார்ந்து அவர்களை காலி செய்வதுதான் பாஜகவின் செயல் என திருமாவளவன் பலமுறை கூறியுள்ளார். இப்படி தான் பாஜக பல மாநிலங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து இவர்கள் திமுக, அதிமுக கட்சிகளை சில மத்திய அரசு நிறுவனங்களை வைத்து மிரட்டுவதாகவும் பேசி வருகிறார்கள். இவர்களின் நோக்கம் அதிமுகவில் இருந்து பிரிந்து நிற்கும் சசிகலா, டிடிவி தினகரன் போன்றோரின் சமூக ஆதரவை பெறவே முயற்சிக்கிறார்கள். அதனால் தான் முத்துராமலிங்கம் கூறியது என பரப்புகிறார். 

 

பாஜகவினர் முக்குலத்தோர் வாக்குகளை பிரிக்கவே முயல்கிறார்கள். தொடர்ந்து, பாஜக நிர்ப்பந்தித்த எம்.பி. இடங்களை அதிமுக தர மறுக்கிறது. இதனால், கட்சியின் சுய லாபத்திற்காகத் திட்டமிட்டு அறிஞர் அண்ணாதுரையை கொச்சைப்படுத்துகிறார்கள். பாஜகவினர், ஒன்று அண்ணாவை அவமானப்படுத்துகிறார்கள் அல்ல வருமானவரிச் சோதனை என எச்சரிக்கிறார்கள். இது எத்துனை பெரிய அயோக்கியத்தனம்? ஜனநாயகத்தில் இருப்பவர்கள் இதனை எப்படி ஏற்றுக்கொள்வார்கள். எனவே, அதிமுகவின் இந்த துணிச்சலுக்கு பாராட்ட விரும்புகிறேன். 

 

தி.மு.க. வருகிற மக்களவை தேர்தலில் நாற்பதிலும் வெற்றி பெறும். இதனை, நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம் என்பதால் சொல்லவில்லை. அ.தி.மு.க.வுடன் பாஜக இருக்கும் வரை எங்களுக்குத் தான் நல்லது. ஒருவேளை அ.தி.மு.க. தனித்து நின்றால் தி.மு.க விற்கு சற்று சிரமம் தான். நீங்கள் சொல்வது போல பாமகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே சிலவித போக்குகள் இருக்கிறது. இதன் காரணத்தால் விசிக அவர்களுடன் கூட்டணி வைக்கும் என்பது உறுதியில்லை. விசிக எப்பொழுதும் கொள்கை, கோட்பாடு அடிப்படையில் யுத்தம் செய்பவர்கள். மேலும், எங்களுக்கு தேர்தல் என்பது பிரதானம் இல்லை. அடுத்த தலைமுறையின் வளர்ச்சியே எங்களுக்கு முக்கியம். இதனையொட்டி அடுத்து மாநாடும் நடத்தவுள்ளோம். அதற்கு 'வெல்லும் ஜனாயகம்' எனவும் பெயரிட்டு ‘விடுதலைச் சிறுத்தைகளின் அடுத்த பாய்ச்சல்’ எனவும் சேர்த்துள்ளோம். இவ்வளவு ஏன், திமுக வெற்றி பெற்றதற்கும் விசிக முக்கிய பங்கு வகித்திருக்கிறது என சில ஊடக அறிக்கைகளே சொல்லியது. அதனால், கூட்டணி குறித்து நான் பேச முடியாது. கட்சித் தலைமை சொல்வதைத் தான் நான் செயலபடுத்த முடியும். தேர்தல் நேரத்தில் தான் எது குறித்தும் தீர்மானிக்க முடியும். 

 

சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் மக்களவை தேர்தலாக இருந்தாலும் விசிக இதுவரை சிறப்பாகவே வெற்றி பெற்று வந்துள்ளது. இந்த முறை விசிக பானை சின்னத்தில் நிற்கவே விரும்புகிறது. மேலும், ஆறு எம்.பி. இடங்கள் வரையும் கேட்கவுள்ளது. ஏனென்றால் நாங்கள் இதற்கு முன்பு சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்களில் பெற்ற வெற்றியை வைத்துதான் சொல்கிறோம். ஏனென்றால் விசிகவிற்கு தமிழக அளவில் மிகப்பெரிய கட்டமைப்பை வைத்துள்ளோம். எனவே, எங்களுக்கு அ.தி.மு.க. கட்சியுடன் எந்த முரணும் இருந்தது இல்லை.

 

ஏன் ஜெயலலிதா கூட, கூட்டணியில் இருந்து செல்பவர்கள் மயிருக்கு சமானம் என்று பேசியுள்ளார். ஆனால், திருமாவளவன் அவர்கள் வெளியேறும் பொழுது ‘தம்பி திருமாவளவனுக்கு அரசியலில் அவசரம் கூடாது. அவர் எங்கு சென்றாலும் வெற்றிபெற கூடாது’ எனவும் கூறியுள்ளார். நான் வெளிப்படையாக சொல்கிறேன், திமுக ஆட்சிக் காலத்தில் எங்கள் கட்சிக் கொடியை ஏற்ற சிரமமாக உள்ளது. ஆனால், அதிமுக காலத்தில் அப்படி எந்த சிரமமும் இருந்ததில்லை. பிரச்சனையை உருவாக்க இதனை நான் கூறவில்லை. இதற்கிடையில் அ.தி.மு.க. இன்றைக்கு பாஜகவை ‘வெளிய போடா...’ என்பது போல் அழைத்துள்ளது. ஒருவேளை நாளைக்கே பாஜக வருமானவரித் துறை, அமலாக்கத்துறை சோதனையை விடுத்து, பின் அதிமுக பாஜகவை ஆதரித்தால், இதனை வைத்துக்கொண்டு விமர்சிக்காமல் எந்த சூழ்நிலையிலும் கருத்துகளை விசிக பதிவிடும். விசிகவிற்கு கொடியேற்றுவது கூட சிக்கலாகத்தான் இருக்கிறது. இதனை முதல்வரிடமும் கொண்டு செல்லவேண்டும். சமீபத்தில் மதுரையில் கூட எங்கள் கொடியை இறக்கி பிரச்சனை செய்தார்கள் சிலர். எனவே, எங்களின் சூழல் இப்படியாக இருக்கிறது.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...