Thiyagathurugam veeracholapuram bypass road incident 4 people arrested

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே புக்குளம் காட்டுக்கொட்டாய் பகுதியில் பழனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் பழனியப்பன் தியாகதுருகம் அருகே உள்ள வரதப்பனுரில் உள்ள தனது அண்ணன் மகன் வீட்டிற்குக் கடந்த 23ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

Advertisment

அதன் பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது தியாகதுருகம் அருகே உள்ள வீரசோழபுரம் புறவழிச் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தை வழிமறித்து தன்னை தாக்கியும் தான் வைத்திருந்த ரூ. 30 ஆயிரம் பணத்தைப் பறித்துச் சென்றதாக 4 பேர் மீது தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கை உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து கொடுவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் வழிப்பறி செய்யப்பட்ட ரூ. 30 ஆயிரம் பணத்தைப் பறிமுதல் செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கை உட்பட நான்கு பேரைக் கைது செய்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.