Skip to main content

எந்த குற்றவாளியும் தப்பித்துவிட முடியாது- அ.தி.க திவாகரன்

Published on 12/01/2019 | Edited on 12/01/2019
thivakaran


கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் உண்மையை யாரும் மறைக்க முடியாது என்றும், குற்றவாளிகள் தப்பித்துவிட முடியாது என்றும் அ.தி.க பொதுச் செயலாளர் திவாகரன் கூறியுள்ளார்.
 

கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திவாகரன், கைது செய்யப்பட்டதோடு இந்த விவகாரம் முடிந்துவிட வில்லை என்று திவாகரன் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றலாம், அனைத்து விஷயங்களுக்கும் பதில் சொல்லும் அ.மா.மு.க துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் இந்த விஷயத்தில் மௌனமாக இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறியுள்ளார். 
 

‘இந்திய அரசியல் அமைப்பில் எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தாலும் தண்டிக்கப்படுகிறார்கள். எத்தனை முதலமைச்சர்கள், மத்திய மந்திரிகள் குற்றவாளிகாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள் என்பதை பார்த்துகொண்டுதான் இருக்கிறோம். தற்போதைய காலகட்டத்தில் எதையுமே மறைக்க முடியாது. இதில் எந்த குற்றவாளியும் தப்பித்துவிட முடியாது என்ற நிலைமை இருக்கிறது. ஆனால், அதற்கு கொஞ்சம் காலம் எடுத்துக்கொள்ளும்’ என்றார்.
 

இதனையடுத்து அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது, வந்த செலவுகள் குறித்தும் விளக்கம் அளித்தார் திவாகரன். ‘கிட்டத்தட்ட அங்கு ஒரு மிகப்பெரிய ஒரு குழு இருந்தது. அதில் ஒரு பத்து பேர்தான் சசிகலாவின் குடும்பத்தினர். அங்கு எப்படி ஒன்றரை லட்சம் பேரை கொண்டு சசிகலா வைத்திருக்க முடியும். இதெல்லாம் குற்றச்சாட்டுகளுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். இதை தரங்கெட்ட விமர்சனம் எல்லாம் செய்யக்கூடாது. இதை சிலர் பெரிய அளவில் எடுத்துகொண்டு வியாக்கியானம் பேசுகிறார்கள். அதன்பின் நானே விசாரித்தேன், யாரெல்லாம் அங்கு வந்து சாப்பிட்டார்கள் என்று பின்னர், பல மந்திரிகள், உயரதிகாரிகள், அவர்களின் பிஏக்களும் சாப்பிட்டனர்’ தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திவாகரன் மோடி சந்திப்பு?

Published on 09/02/2019 | Edited on 09/02/2019

 

jai Anand



சசிகலா உறவினர்கள் பிரதமரை சந்திக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சசிகலாவின் சகோதரர் திவாகரன் இவர் அண்ணா திராவிடர் கழகம்  என்கிற கட்சியை நடத்தி வருகிறார். இவர் நேற்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்திருக்கிறார். இன்று அவர் பிரதமர் மோடிக்கு நெருக்கமான ஆலோசகர் ஒருவரை சந்தித்துள்ளார். தினகரன் அமமுகவை அதிமுகவோடு இணைக்க பாஜக சொன்ன யோசனையை கேட்கவில்லை அதனால் திவாகரன் தினகரனுக்கு செக் வவைக்க நினைத்தார். அவர் தனது கட்சியை பாஜக கூட்டணியில் இணைப்பது அல்லது பாஜக  யோசனை தெரிவித்தால் அதிமுகாவோடு தனது கட்சியை இணைப்பது என்கின்ற முடிவுக்கு வந்துள்ளார்.

 

DIVAKARAN

 

தினகரனை தனது எதிரியாக நினைக்கும் பாஜகவிற்கு கூடுதல் ஆதரவு நிலைகளை தமிழகத்தில் ஏற்படுத்த திவாகரன் பாஜகவோடு பேச தொடங்கியுள்ளார். சசிகலாவை தனது எதிரியாக கருதும் பாஜகவுடன் திவாகரன் ஏற்படுத்தியுள்ள இந்த உறவு சசிகலா சொல்லித்தான் நடந்துள்ளதா என்கிற கேள்வி அதிமுகவினரிடையே எழுந்துள்ளது.

 

MEET

 

இந்த சந்திப்பு திவாகரனின் தனிப்பட்ட முடிவா? அல்லது மன்னார்குடி குடும்பத்தின் திருவிளையாடலா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இந்த சந்திப்பிற்காக கடந்த ஒரு மாதமாக திவாகரன் முயற்சி செய்து வந்தார். அவருடன் அதிமுகவுடன்  கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் அமைச்சர் பியூஸ் கோயல் நடத்திய சந்திப்பு பெரிய விவாதங்களை உருவாக்கி உள்ளது. அடுத்து என்ன நடக்கும், சசி குடும்பத்தினர் முழுவதுமே டிடிவி தினகரனுக்கு எதிராக உள்ள சூழலில் இந்த சந்திப்பு தினகரன் தனி  சசி குடும்பம் தனி என்கிற நிலையை உருவாக்குமா?  என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

 

MEET

 

இதில் சசி தினகரன் பக்கம் நிற்பாரா அல்லது திவாகரன் பக்கம் போய் பாஜகவுடன் சமரசம் செய்து கொள்வாரா என்பது பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெ.மறைந்த இரண்டு ஆண்டுகளில் சசி குடும்ப உறுப்பினர் ஒருவரை மத்திய அமைச்சர் சந்திப்பது இதுதான் முதல்முறை என்பதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.   

 

 

 

Next Story

கலகலத்த சசி குடும்ப அரசியல்! வேட்டு வைத்த ராவணன்!

Published on 01/05/2018 | Edited on 02/05/2018
தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வின் அடுத்த அசைவை தீர்மானித்திருப்பவர் யார்? என கேள்வி கேட்டால் முதல்வர் எடப்பாடி, ஓ.பி.எஸ்., தினகரன், திவாகரன் என நால்வரில் ஒருவர் பெயர் பதிலாக வரும். இந்த நான்கும் தவறான விடை. அ.தி.மு.க.வின் அடுத்த அசைவை தீர்மானித்திருப்பவர் ராவணன் என்பதுதான் சரியான விடை என்க... Read Full Article / மேலும் படிக்க,