திட்டக்குடி வட்டாட்சியர் அந்தோணி ராஜ் விருத்தாசலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக காரில் சென்றுள்ளார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வட்டாட்சியர் அந்தோணி ராஜ், அதே காரில் திரும்பியுள்ளார். காரை ஓட்டுநர் பாலமுருகன் ஓட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் இருந்த மின்மாற்றியில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது. இதில் வட்டாட்சியர் அந்தோணி ராஜ் மற்றும் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரையும் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மின்மாற்றி மீது கார் தலைகீழாக்கக் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.