அமெரிக்காவில் உள்ள கரோலினா மாகாணம் சான் போடு நகரை சேர்ந்தவர் 22 வயது பிரட்டி. இவர் நமது தமிழர்களின் பண்பாடு கலை காலாச்சாரம் போன்றவைகள் பற்றி ஆய்வு செய்வதற்க்காக ஆர்வமாக சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்து தங்கினார். அதோடு ஆய்வுக்குரிய தகவல்களை திரட்டுவதற்காக இணையதளத்தில் ஒரு முகநூல் துவங்கி அதன் மூலம் தகவல் அளித்து உதவுமாறு பதிவிட்ருந்தார்.

Advertisment

Tittagudi

இதை படித்து பார்த்த பலர் பிரட்டிக்கு உதவி செய்தனர். அதில் ஒருவர் பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூரை சேர்ந்த சூர்ய பிரகாஷ். பி.இ. பட்டதாரியான இவர் முகநூல் மூலம் பிரட்டிக்கு அறிமுகமானதோடு அவருக்கு தேவையான தகவல்களை அவ்வப்போது அனுப்பி உதவி செய்து வந்தார். தமிழர் பண்பாடு தமிழர் நாகரீகம் விழாக்கள் திருமண விழாக்கள் கோவில் விழாக்கள் என பல தகவல்களையும் அதற்கான புகைப்படங்கள் வீடியோக்கள் என தொடர்ந்து அனுப்பி உதவி செய்து வந்தார்.

இதை பார்த்த பிரட்டிக்கு சூர்யகுமார் மீது மதிப்பு மிகுந்தது. தனது செல்போன் மூலம் சூர்யகுமாரிடம் பிரட்டி ஆய்வுகள் பற்றி விரிவாக அடிக்கடி பேசி வந்தார். இதன் மூலம் இருவரும் நல்ல நண்பர்களாக பழகினார்கள். இந்த நட்பு நீடிக்கவே அது காதலாக மாரியது. இருவரும் அவரவர் பெற்றோர்களிடம் பேசி திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன் படி பிரட்டி - சூர்யகுமார் இருவருக்கும் கடந்த 24ம் தேதி திட்டக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்த விழா மிகசிறப்பாக நடைபெற்றது.

Advertisment

அப்போது மணமகள் பிரட்டி, சூர்யகுமாரின் உதவி செய்யும் மனப்பான்மை ரொம்ப பிடித்துள்ளது. மேலும் தமிழ் மக்களின் உணவு, உடை, உபசரிப்பு அவர்கள் காட்டும் அன்பு பாசம் மனித நேயம் கடவுள் மீதுள்ள பக்தி அவர்கள் நடத்தும் விழாக்கள் வீரவிளையாட்டுக்கள் என பல அம்சங்களும் என்னை கவர்ந்து விட்டன எனவே தமிழ் பெண்ணாக வாழ வேண்டும் என விரும்பினேன். சூர்யகுமாரும் இதற்கு மனமகிழ்வோடு சம்மதம் தெரிவித்தார். இது விஷயமாக அமெரிக்காவில் உள்ள எனது பெற்றோரிடம் பேசி முழு சம்மதம் பெற்றேன். அதன்படி இப்போது நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. இந்த விழாவிற்க்கு பணிகள் காரணமாக அவர்களால் வர இயலவில்லை. வாழ்த்து செய்திகள் அனுப்பியுள்ளனர். அடுத்த ஆண்டு அமெரிக்காவில் எங்கள் ஊரில் மிக சிறப்பான முறையில் எங்கள் திருணம் எங்கள் பெற்றோர்கள் முன்னிலையில் தமிழ் மரபுப்படி நடைபெற உள்ளது என்று சந்தோஷமாக கூறி அசத்துகிறார் பிரட்டி.

Tittagudi

அகரம் சீகூர் ஒரு சின்ன கிராமம் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த கிராமத்து பெண்கள், மூதாட்டிகள் என பலரும், ''ஆத்தாடி இந்த வெள்ளை கார பொண்ணுக்கு நம்ப ஊரு மாப்பிள்ளைய பிடிச்சி போன அதிசயத்த பார்த்தியா'' என்று கன்னத்தில் கை வைத்து கொண்டு வியப்பாக பார்த்து பேசி கொண்டனர். கிராமத்தில் அடியெடுத்து வைத்து வாழப்போகும் அமெரிக்க பெண் வாழ்க வளமுடன்