Advertisment

நிச்சயதார்த்த பெண் கடத்தல்... 

police

விழுப்புரம் மாவட்டம்திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பிளஸ் டூ முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது பெற்றோர்கள் முடிவு செய்தனர். அதன்படி மாப்பிள்ளை பார்க்கப்பட்டு பேசி முடிவு செய்தனர். நேற்று நிச்சயதார்த்தம் நடப்பதாக தேதி குறிப்பிட்டு உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர் அந்தப் பெண்ணின் பெற்றோர்கள்.

Advertisment

மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்குத் தேவையான பொருட்கள் விருந்துக்குத் தேவையான காய்கறிகள், மளிகை சாமான்கள் வாங்குவதற்காக திருக்கோவிலூர் சென்றிருந்தனர். அனைத்தையும் வாங்கிக் கொண்டு மாலை வீடு திரும்பினார்கள். ஆனால் வீட்டில் அவர்களது மகள் இல்லை. மகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் விசாரித்த போது, அதே கிராமத்தைச் சேர்ந்த திருமலை, காசி, வீரமாதேவி திருநாவுக்கரசு ஆகியோர் கடத்திச் சென்றதாக தெரியவந்தது, இதையடுத்து அந்தப் பெண்ணின் பெற்றோர் திருவெண்ணைய் நல்லூர் போலீசில் புகார் செய்துள்ளனர். இந்தப் புகார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கடத்திச் செல்லப்பட்ட பெண் குறித்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisment

Thiruvennainallur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe