திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவம் நடந்து கொண்டிருந்தது. காவல் துறை மாவட்ட கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் திருவெண்ணைநல்லூர் உதவி ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த ஏழு நாட்களாக உணவு இல்லாமல் உறக்கமில்லாமல் கடமையே கண்ணாக எண்ணி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 3 திருடர்களை வலைவீசித் தேடி பிடித்து கைது செய்து இந்த இந்த பகுதியில் பல திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அல்லும் பகலும் அயராது பாடுபட்ட காவல்துறைக்கு சமூக ஆர்வலர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த பகுதியில் வசித்து கொண்டிருக்கிற இளைஞர்கள் அந்தந்த பகுதியில் குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க இளைஞர்கள் பாதுகாப்பு வளையத்தை அமைத்து தான் சார்ந்திருக்கிற கிராமங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் தேவைப்படும் பட்சத்தில் காவல்துறையின் உதவியை நாடலாம் என்றும் அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம் திருவெண்ணை நல்லூர் பகுதியில் அச்சத்தில் வாழ்ந்த மக்களை அச்சமின்றி வாழ்வதற்கு கடுமையான முயற்சி செய்து கொள்ளை கூட்டத்தை பிடித்த காவல் துறைக்கு நன்றி தெரிவித்தனர் அப்பகுதி மக்கள்.