Advertisment

"விவசாயத்திற்கு எதிரான அனைத்து திட்டங்களையும் தடைசெய்தால் தான் முழுமையான வேளாண் மண்டலமாக அமையும்"- பொன்.குமார் பேட்டி!

"இதற்குமுன்பு அனுமதி கொடுத்தது மட்டுமல்லாமல் தற்போது செயல்பாட்டில் உள்ள அனைத்து திட்டங்களும் தடை செய்யப்பட்டால்தான் அது முழுமையான பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அமையும்," என்கிறார் கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் தலைவர் பொன்குமார்.

Advertisment

திருவாரூரில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பில் நடந்த நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டத்தில் மாநில தலைவர் பொன்.குமார் கலந்துகொண்டார்.

Advertisment

THIRUVARURU  Confederation of Construction and Lands association president

இந்நிகழ்ச்சிக்கு இடையில் செய்தியாளரிடம் பேசியவர்," கட்டுமானத்துறை பாதுகாக்கப்பட வேண்டுமானால் அதற்கு தனித்துறை தனிஅமைச்சர் இருக்க வேண்டும். அண்மைக்காலமாக மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆற்றுமணல் கிடைக்கவில்லை என்றால் அதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணல் கிடைப்பதற்கு தாராளமாக அரசு வழிவகை செய்ய வேண்டும். ஆனால் எம்சாண்ட் தயாரிப்புக்கான ஒப்பந்தங்கள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாக என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே அரசாங்கம் இதில் தலையிட்டு தரமாக எம்சான்ட் மணல் தாரளமாக கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் அறிவித்தது வரவேற்கக்கூடியது. ஆனால் அந்த அறிவிப்பில் ஏராளமான ஓட்டைகள் இருக்கிறது. இந்த ஓட்டைகள் அடைக்காமல் முழுமையான பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக கருதமுடியாது. ஏற்கனவே 341 ஒப்பந்தங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் ஒட்டுமொத்த டெல்டாவும் பாழாகிவிடும், ஏற்கனவே அனுமதி கொடுத்தது மட்டுமல்லாமல் நிகழ்காலத்தில் அனைத்து திட்டங்களும் தடை செய்யப்பட்டு விவசாயத்தை மட்டும் பாதுகாக்கக்கூடிய நோக்கத்தோடு இருந்தால்தான் அது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அமையும்." என்றார் அவர்.

agriculture land Farmers Tiruvarur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe