thiruvarur valanfgaimaan shop incident

Advertisment

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் செந்தில் குமார் என்பவர் வெடிக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக விற்பனைக்கு வைத்திருந்த வெடிகள் வெடித்து தீ மளமளவெனக் கடை முழுவதும் பரவியது. இதனால் கடையிலிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. மேலும் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

இது குறித்துத்தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதே சமயம் அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட வெடிக் கடைகள் உள்ளதுகுறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.