திருவாரூர் அருகே இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கிடையே மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசி, பயங்கர ஆயதங்களால் தாக்கி கொண்டதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். இரு சக்கர வாகனங்கள் சேதமாகின.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/q1_2.jpg)
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மணக்கால் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் அறிவானந்தம் (26). இவர் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்தவர். நேற்று இரவு மணக்கால் கிராமத்தில் உணவு விடுதியில் இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் ஆரோக்கிய செல்வம் (36) ஆகிய இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இன்று இரு தரப்பினரும் தீபங்குடி வெட்டாற்றங்கரை பகுதியில் திடிரென மோதல் சம்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/q2_1.jpg)
மோதலின்போது நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், ஒருவருக்கு ஒருவர் அறிவாள் போன்ற கொடூர ஆயுதங்களால் தாக்கி கொண்டதில், அறிவானந்தம் என்பவரது தலையில் அறிவாளால் வெட்டி விட்டு மற்றவர்கள் வந்த இரு சக்கர வாகனங்களையும் சேதப்படுத்தி விட்டு தப்பி உள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/q3_1.jpg)
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடவாசல் போலீசார் அறிவானந்தை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இம்மோதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது குடவாசல் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us