மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுக செயல்பாட்டாளர்களும், பொதுமக்களில் பெரும்பாலான தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவாரூரில் இன்று மாணவர் சங்கத்தினர் எர்ணாக்குளம் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முழக்கமிட்டபடியே பேரணியாக சென்றனர்.

Advertisment

Advertisment

அவர்களை இடையில் தடுத்து நிறுத்திய காவல்துறையினருக்கும், மாணவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளையும் எட்டி உதைத்து தகர்த்துவிட்டு தடைகளை மீறி சென்று தண்டவாளத்தில் அமர்ந்து முழக்கமிட்டபடியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போலிஸார் அதிகம் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராகவும், துணைப்போகும் மாநில அரசையும் கண்டித்து ஆவேசமான முழக்கங்களை எழுப்பினர்.