Advertisment

அதிவிரைவு ரயில் முன் பாய்ந்து தாயும், மகளும் பலி!

திருவாரூரில் தாயும் மகளும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருவாரூர் நகரப்பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (45), இவருக்கு கோமதி என்ற மனைவி (37) நாகஸ்ரீ (5 ) நவஸ்ரீ (3)என்ற இரு மகள்கள் உள்ளனர். செல்வம் கோயம்பத்தூர் பகுதியில் கட்டட வேலை செய்து வருகிறார். கோமதி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

Advertisment

THIRUVARUR RAIL SUICIDE IN ONE FAMILY DEATH TWO PERSON

இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னையிலிருந்து மன்னார்குடி நோக்கி செல்லும் விரைவு ரயிலில் கோமதி மற்றும் நவஸ்ரீ இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த ரயில்வே ஓட்டுநர், ரயில்வே காவலர்களுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து ரயில்வே போலீசாரும், திருவாரூர் நகர காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது உடல் சிதறி இருவரும் இறந்து கிடந்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குடும்பத்தகராறு காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தற்கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

Advertisment

rail Suicide Thiruvarur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe