Advertisment

தனியார் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து.

திருவாரூர் அருகே தனியார் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து. இந்த விபத்தில் 30- க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

Advertisment

thiruvarur private bus incident passengers admit at hospital

திருவாரூரில் இருந்து வடபாதிமங்கலம் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திருநாட்டியத்தான்குடி என்ற பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலையில் தடுமாறி சாலைக்கு அருகில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணம் செய்த 30- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இருப்பினும் பேருந்தில் பயணம் செய்த அனைவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். பேருந்து விபத்துக்குள்ளானதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisment

thiruvarur private bus incident passengers admit at hospital

அதன் பேரில் அப்பகுதிக்கு உடனடியாக விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தோர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதே பேருந்து இப்பகுதியில் தொடர்ந்து பலமுறை ஆற்றில் கவிழ்வது வாடிக்கையாக இருப்பதாக. இந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். விபத்து குறித்து வடபாதிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

hospital bus incident Thiruvarur Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe