/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thiruvarur-court-art-1.jpg)
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்துள்ள பூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். வளரும் தமிழகம் கட்சியின் மண்டல இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார். பூவனூர் ராஜ்குமார் மீது தமிழகம் முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட கொலை மற்றும் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வனை கொலை செய்த வழக்கில் ராஜ்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அந்த வழக்கில் சிறையில் இருந்து விட்டு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு தனது ஆதரவாளர்கள் நான்கு பேருடன் வந்துள்ளார்.
வழக்கு விசாரணை முடிந்து, தனது வழக்கறிஞரை கமலாபுரத்தில் விடுவதற்காக காரில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஸ்கார்பியோ கார் அதிவேகமாக வந்து ராஜ்குமாரின் காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி, டோர் லாக் ஆனதும் மற்றவர்கள் இறங்க முடியாமல் போக, ராஜ்குமார் மட்டும் தப்பிக்க ஓடும் போது, ஸ்கார்பியோ காரிலிருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ராஜ்குமாரின் தலை கால் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத்தேடும் பணியினைத்தீவிரப்படுத்தினார்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்த நடேச தமிழார்வனின் மகன் ஸ்டாலின் பாரதி, வீரபாண்டியன், சூர்யா, அரசு, மாதவன் ஆகிய ஐந்து நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் ஆய்வாளர்கள் ஜெகதீஸ்வரன் ராஜேஷ் இளங்கோ ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மீதமுள்ள குற்றவாளிகளைத்தேடி வருகின்றனர்.விசாரணையில் இருக்கும் போலீசாரோ, "கடந்த 11.10.2021 அன்று நீடாமங்கலம் கடை தெருவில் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட நீடாமங்கலம் சிபிஐ ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வனின் படுகொலைக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த படுகொலை நடந்துள்ளதாகத்தெரிய வருகிறது." என்கிறார்கள். இதற்கிடையில் ராஜ்குமாரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும்அவரது கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)