Advertisment

அக்கா கணவரை நன்பனோடு சேர்ந்து கொன்ற மைத்துனர்!!!

அக்காவை துன்புறுத்தியதாக, அக்கா கணவரை நண்பருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாகியிருக்கிறது.

Advertisment

needamangalam

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம், பாம்பால் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முரளிக்கு (34) குத்தாலத்தை சேர்ந்த திவ்யாவை (26) திருமணம் செய்துவைத்தனர். தம்பதியினர் இருவருக்கும் சந்தேகத்தின் உச்சத்தால் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலமையில் திவ்யாவின் தாய் இந்திராணிக்கு உடல்நிலை சரியில்லை என கனவன் முரளியோடு வந்திருந்தார் திவ்யா. இந்தநிலையில் அப்பகுதியில் ரயிலடி அருகே பைரவர் நகரில் முரளி கொலை செய்யப்பட்டு கிடந்தது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. முரளியின் உடலை கைப்பற்றிய குத்தாலம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர், விசாரணையில் திவ்யாவின் தம்பி செல்வகணபதிதான்(19)கொலை செய்துள்ளான் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசாரிடம் விசாரித்தோம், “முரளி பதநீர் வியாபாரி வியாபாரத்திற்கு அடிக்கடி வெளியூர் போய்விடுவார், திவ்யாவுக்கு நீடாமங்கலத்தில் குடியிருந்த பகுதியில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வரும் சுரேஷ் என்பவனோடு பழக்கம் ஏற்பட்டிருக்கு. இருவரும் ஒருகட்டத்தில் நெருங்கி பழகி சென்னைக்கு ஓடிவிட்டனர். ஆறு மாதம் கழித்து தேடித்திரிந்து திவ்யாவை முரளி மீண்டும் அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்தார். ஆனாலும் தம்பதியினர் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. முரளி, திவ்யாவை சந்தேகப்பட்டு திட்டுவதையும், அடிப்பதையும், தினசரி வாடிக்கையாகவே வைத்திருந்திருக்கிறான். ஒரு கட்டத்தில் திவ்யாவின் தம்பி செல்வகணபதியை திவ்யாவோடு இணைத்து பேசி மேலும் இருவருக்கும் இடையே விரிசலானது. விரக்தியான திவ்யா தம்பியிடம் கூறி அழுதுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த செல்வகணபதி அக்கா கணவரை தீர்த்துக்கட்ட திட்டமிடுகிறான். அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை எனக்கூறி முரளியையும், திவ்யாவையும் வரவழைத்துள்ளான். பிறகு முரளியை அழைத்துக்கொண்டு நன்பன் கமலஹாசனோடு மதுகுடிக்க அழைத்துச் சென்றுள்ளான். மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு ஆள் நடமாட்டமில்லாத பைரவர் பிளாட்டுக்கு வந்து அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்துள்ளனர். போதை ஏறியதும் செல்வகணபதியும், கமலஹாசனும் மது பாட்டிலால் முரளியின் தலையில் அடித்து மண்டையை உடைத்தனர். பின்னர் செல்வகனபதி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக முரளியின் வயிற்றில் குத்தி விட்டு பைக்கில் ஏறி நண்பருடன் தப்பிவிட்டான் பிறகு அவனை கண்டுபிடித்து சிறையில் தள்ளியுள்ளோம்" . என்கிறார்.

needamangalam Thiruvarur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe