Skip to main content

அக்கா கணவரை நன்பனோடு சேர்ந்து கொன்ற மைத்துனர்!!!

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

அக்காவை துன்புறுத்தியதாக, அக்கா கணவரை நண்பருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாகியிருக்கிறது.
 

needamangalam



திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம், பாம்பால் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முரளிக்கு (34) குத்தாலத்தை சேர்ந்த திவ்யாவை (26) திருமணம் செய்துவைத்தனர். தம்பதியினர் இருவருக்கும் சந்தேகத்தின் உச்சத்தால் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலமையில் திவ்யாவின் தாய் இந்திராணிக்கு உடல்நிலை சரியில்லை என கனவன் முரளியோடு வந்திருந்தார் திவ்யா. இந்தநிலையில் அப்பகுதியில் ரயிலடி அருகே பைரவர் நகரில் முரளி கொலை செய்யப்பட்டு கிடந்தது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. முரளியின் உடலை கைப்பற்றிய குத்தாலம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர், விசாரணையில் திவ்யாவின் தம்பி செல்வகணபதிதான்(19)கொலை செய்துள்ளான் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசாரிடம் விசாரித்தோம், “முரளி பதநீர் வியாபாரி வியாபாரத்திற்கு அடிக்கடி வெளியூர் போய்விடுவார், திவ்யாவுக்கு நீடாமங்கலத்தில் குடியிருந்த பகுதியில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வரும் சுரேஷ் என்பவனோடு பழக்கம் ஏற்பட்டிருக்கு. இருவரும் ஒருகட்டத்தில் நெருங்கி பழகி சென்னைக்கு ஓடிவிட்டனர்.  ஆறு மாதம் கழித்து தேடித்திரிந்து திவ்யாவை முரளி மீண்டும் அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்தார். ஆனாலும்  தம்பதியினர் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. முரளி, திவ்யாவை சந்தேகப்பட்டு திட்டுவதையும், அடிப்பதையும், தினசரி வாடிக்கையாகவே வைத்திருந்திருக்கிறான். ஒரு கட்டத்தில் திவ்யாவின் தம்பி செல்வகணபதியை திவ்யாவோடு இணைத்து பேசி மேலும் இருவருக்கும் இடையே விரிசலானது. விரக்தியான திவ்யா தம்பியிடம் கூறி அழுதுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த செல்வகணபதி அக்கா கணவரை தீர்த்துக்கட்ட திட்டமிடுகிறான். அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை எனக்கூறி முரளியையும், திவ்யாவையும் வரவழைத்துள்ளான். பிறகு முரளியை அழைத்துக்கொண்டு நன்பன் கமலஹாசனோடு மதுகுடிக்க அழைத்துச் சென்றுள்ளான். மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு ஆள் நடமாட்டமில்லாத பைரவர் பிளாட்டுக்கு வந்து அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்துள்ளனர். போதை ஏறியதும் செல்வகணபதியும், கமலஹாசனும் மது பாட்டிலால் முரளியின் தலையில் அடித்து மண்டையை உடைத்தனர். பின்னர் செல்வகனபதி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக முரளியின் வயிற்றில் குத்தி விட்டு பைக்கில் ஏறி நண்பருடன் தப்பிவிட்டான் பிறகு அவனை கண்டுபிடித்து சிறையில் தள்ளியுள்ளோம்" . என்கிறார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.