Published on 02/02/2023 | Edited on 02/02/2023

மழைக் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது பின்பு தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், நேற்று இரவு முதல் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் தொடர் கனமழை பெய்து வருவதால் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(2.2.2023) விடுமுறை அளித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோன்று மழையின் காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.