Advertisment

அமைச்சர் வீட்டுவாசலில் ர. ர. தீ குளிக்க முயற்சி

பாஜகவுடன் அதிமுக ஏன் கூட்டணி வைத்தது என்று கேட்டு அமைச்சர் வீட்டு வாசலில் தீ குளிக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

f

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் ஹக்கீம். அதிமுக தீவிர ஆதரவாளர். அமைச்சர் காமராஜ் உடன் செல்பவர்.

கடந்த சில நாட்களாக தொகுதியை சுற்றி வந்த போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் அதிமுகவுக்கு இறங்குமுகமாக உள்ளதாக ர. ரக்களே சொன்னதை கேட்டு மன வேதனையடைந்த ஹக்கீம் இரவு நேரத்தில் மன்னார்குடியில் உள்ள அமைச்சர் காமராஜ் வீட்டுக்குச் சென்று பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது ஏன் என்று கேட்டுக் கொண்டு தன் உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ குளிக்க முயன்றவரை அப்பகுதியில் நின்றவர்கள் காப்பாற்றி போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மன்னார்குடி போலிசார் ஹக்கீமை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

minister kamaraj Mannargudi Thiruvarur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe