Skip to main content

செவிலியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் மீது மூன்று வழக்குகள்- திருவாரூர் பரபரப்பு

Published on 04/04/2019 | Edited on 04/04/2019

 

அரசு மருத்துவர் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லைகொடுத்து வந்ததாக டாக்டர்மீது 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

 

d

 

 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை பூர்வீகமாக கொண்ட டாக்டர்.மணவழகன்.  உள்ளிக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலராக பணியாற்றிவருகிறார். 55 வயதான இவரை மருத்துவமனை வட்டாரத்தினர்  மன்மதடாக்டர் என்றே அழைக்கின்றனர்.இவர் தமிழ்நாடு மருத்துவஅலுவலர்கள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட தலைவராகவும் இருந்து வருகிறார்.

 

 இந்த நிலையில் டாக்டர் மணவழகன் மீது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் நிரந்தர செவிலியர்களும்  தற்காலிகமாக பணிபுரியும் செவிலியர்களும் என 7 க்கும் மேற்பட்டோர் கடந்தமாதம் திருவாரூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனரான ஸ்டான்லே மைக்கேலிடம் புகார் அளித்தனர். அந்த புகாரில், ‘’டாக்டர் மணவழகன் தங்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும், அனுமதி இன்றி உடம்பில் கண்ட இடங்களில்  தொடுவதாகவும், சிலநேரம் செல்போன் மூலம் ஆபாசமாக படம் பிடிப்பதாகவும், ஆபாசமாக பேசுவதாகவும்’’ கூறி இருந்தனர்.

 

 புகாரை வாங்கிய துணைஇயக்குனர் டாக்டர் ஸ்டான்லேமைக்கேல், டாக்டர் முத்துலட்சுமி தலைமையில் 3 டாக்டர்கள் கொண்ட விசாரணை கமிட்டி அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்த விசாரணையின் முடிவில், டாக்டர் மணவழகனை  உள்ளிக்கோட்டையில் இருந்து மன்னார்குடி அருகில் உள்ள தலையாமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.  

 

d

 

பணியிடமாற்றத்தோடு அமைதியான இவ்விவகாரம் மீண்டும் விஸ்ரூபம் எடுத்துள்ளது.  3 ம்தேதி மாலை, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஸ்டேன்லி மைக்கேல் தலைமையில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும், ஏழு தற்காலிக செவிலியர்கள் திருவாரூர் மாவட்ட எஸ்பி துரையிடம்,’’ டாக்டர் மாணவர்கள் தங்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாக ’’ மீண்டும் புகார் அளித்தனர். புகாரை வாங்கிய எஸ்பி துரை உரிய விசாரணை நடத்தும்படி, மன்னார்குடி டி,எஸ்,பி,யான கார்த்தியிடம் அனுப்பினார்.   டி,எஸ்,பியோ  அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பிவைத்தார்.

 

    மன்னார்குடியில் உள்ள அனைத்து மகளீர் காவல்நிலயத்திற்கு மாவட்ட துணை இயக்குனர் ஸ்டான்லே மைக்கேல் தலைமையில் அரசுக்கு சொந்தமான வாகனம் மற்றும் தனியார் கார்களில்  பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்கள் வந்தனர். புகாரின்படி இன்ஸ்பெக்டர் பகவதி சரணம் விசாரணை மேற்கொண்டு, டாக்டர் மணவழகன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டன.

 

 இதற்கிடையே டாக்டர் மணவழகனுக்கு ஆதரவான டாக்டர்கள் சுமார் 10க்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்திற்கு வந்துபுகார் குறித்து ஸ்டான்லேமைக்கேலிடம் கேட்டறிந்தனர். அதோடு,துறைரீதியாக ஏற்கனவே நடவடிக்கை எடுத்தாகிவிட்டது, வேண்டுமானால் மீண்டும் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம் என்று கோரிக்கைவிடுத்தனர். அரசு மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்க  ஸ்டான்லே மைக்கேல் மறுத்துவிட்டதால் அங்கு திரண்டிருந்த டாக்டர்கள் மணவழகனுக்கு வேண்டாதவர்களால்   முன்விரோதம் காரணமாக பழிவாங்கப்படுகிறார் என்றும் பழிவாங்கவே புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்  கூச்சலிட்டனர். அதோடு பெண்கள் புகார்கொடுக்க காவல் நிலையத்திற்கு வரும்போது ஸ்டான்லே மைக்கேலுக்கு என்னவேலை என மீண்டும் கூச்சலிட்டனர். 

 

இதுறித்து பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஏழு பெண்களில் ஒருவரிடம் விசாரித்தோம், ‘’ அவரு டாக்டரே இல்லங்க, அப்பா வயசுக்கு இருக்காரு, எங்களை மகளா பார்க்காம, காமக்கண்ணோட்டத்துடனே பார்ப்பது, பேசுவது, தொல்லை கொடுப்பதுமா இருக்கிறார். எந்த நேரம் அவரது போன் வரும்னு பயந்து நடுங்கிய போயிருக்கேன். எந்த பயமும் இல்லாம கூச்சமே இல்லாம அறுவெறுக்க தக்கவகையில் நடந்துக்குவார், வேலை நேரத்தில் மட்டுமில்லங்க, மிட்நைட்லயும் போண் போட்டு தொல்லை குடுப்பார், வேலையே வேனாம்னாலும், குடும்பம் ஓடனுமே என்று தான் தினசரி காலத்த கழிக்கிறோம்,’’ என்கிறார் கண்ணீர் மல்க.


 
இதற்கிடையில் பத்திரிக்கையாளர்களிடம் டாக்டர் மணவழகன் கூறுகையில்’’, நான் தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவராக இருப்பதால் டாக்டர்களின் நன்மைக்காக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தியுள்ளேன். ஸ்டான்லே மைக்கேலை கடுமையாக எதிர்த்துள்ளேன் எனக்கும் ஸ்டான்லேவிற்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது அதன் காரணமாக என்னை பழிவாங்க  தற்காலிக நர்ஸ்களை தூண்டிவிட்டு புகார் கொடுத்துள்ளார். என் மீது எந்த தவறும் இல்லை பொய்யாக கொடுக்கப்பட்ட வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பேன்.’’  என்கிறார் கராராக.

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மம்தா பானர்ஜி உடல்நிலை குறித்து மருத்துவர் விளக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Doctor explains Mamata Banerjee's health

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டு 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நெற்றியில் இருந்து முகத்தின் வழியாக ரத்தம் வழியும் புகைப்படத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டது.

Doctor explains Mamata Banerjee's health

அந்த பதிவில், “மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து அவரை உங்களின் பிரார்த்தனை மூலம் நல்ல நிலைக்கு வர வையுங்கள்” எனப் பதிவிடப்பட்டிருந்தது. மம்தா பானர்ஜி கொல்கத்தா வூட்பர்ன் பிளாக்கில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலவேறு தலைவர்களும் தங்களது ஆறுதலை தெரிவித்துள்ளனர்.

Doctor explains Mamata Banerjee's health!

இந்நிலையில் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் இயக்குநரும், மருத்துவருமான மணிமோய் பந்தோபாத்யாய் கூறும்போது, “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (14.03.2024) இரவு 07:30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னால் இருந்து ஏற்பட்ட அதிர்வு காரணமாக வீட்டில் அவர் விழுந்த தடயம் உள்ளது. இதனால் அவரது பெருமூளை அதிர்ச்சி ஏற்பட்டு நெற்றியிலும் மூக்கிலும் கூர்மையான வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ஆரம்பத்தில் முதலில் மூளை மற்றும் நரம்பியல், மருந்தவியல் மற்றும் இதயவியல் ஆகிய துறையின் தலைமை மருத்துவர்கள் குழுவினரை கொண்டு, உடல் நிலை குறித்து பரிசோதித்து உறுதிபடுத்தப்பட்டது.

Doctor explains Mamata Banerjee's health!
மருத்துவர் மணிமோய் பந்தோபாத்யாய்

நெற்றியில் மூன்று தையல்கள் போடப்பட்டன. ஈ.சி.ஜி., சி.டி. ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மம்தா பானர்ஜி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் வீட்டிற்கு செல்ல விரும்பினார். இதனால் அவரை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன் மருத்துவர் குழுவின் ஆலோசனையின்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். அவருக்கு நாளை (15.03.2024) மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.