Advertisment

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் திருவாரூரில் பரபரப்பு!!!

திருவாரூரை அடுத்த கமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் வடக்கு வீதியில் உள்ள நீதி மோகன் என்பவரிடம் ரியல் எஸ்டேட் மனைகள் வாங்குவதற்காக பல்வேறு நபர்களிடம் பணம் திரட்டி அவரிடம் கொடுத்துள்ளார்.

Advertisment

thiruvarur

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இவர் வாங்கிக் கொடுத்த பணம் மட்டுமே 3 கோடியே 67 லட்சம் ரூபாய் என்கிறார்கள். நீதி மோகன் இது போல் பல்வேறு நபர்களிடம் பணம் வாங்கி ஏமாற்றி விட்டு நீதிமன்றத்தில் மஞ்சள் கடிதம் கொடுத்துவிட்டு சுதந்திரமாக திரிந்து வருகிறார். ஆனால் பணம் கட்டிய நபர்கள் ஏஜெண்டுகள் மூலமாக கட்டியதால் அனைவரும் ஏஜெண்டுகளை தொல்லை கொடுத்து வருகின்றனர்.

அந்த ஏஜெண்டுகளின் ஒருவரான பாண்டியன் என்பவர் பணம் கொடுத்தவர்களின் நெருக்கடி தாங்காமல் திருவாரூர் வடக்கு வீதியில் உள்ள பிஎஸ்என்எல் கோபுரத்தின் உச்சியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். நீதி மோகனை கைது செய்து எனது பணத்தை திருப்பி வாங்கி தரும் வரை கீழே இறங்க மாட்டேன் என்று கூறியபடியே இருந்தார். அவரது மனைவி மற்றும் நண்பர்கள் அனைவரும் கீழிருந்து கூப்பிட்டபோதும் அவர் இறங்க மறுத்து விட்டார். தீயணைப்புத்துறையினர் வாகனங்களை நிறுத்தினர், ஆம்புலன்ஸீம் தயார் நிலையில் வைத்திருந்தனர். இவரின் மிரட்டல் காரணமாக வடக்கு வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார் மற்றும் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பேச்சுவார்த்தை நடத்தி நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர் கீழே இறங்கினர். பின்னர் 108 ஆம்புலன்சின் மூலம் பாண்டியனை முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பினர். இதனால் திருவாரூர் கடை வீதியே பரபரப்பு நிலவியது.

Thiruvarur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe