hydro carbon

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

திருவாரூர் அருகே திருக்காரவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என 100க்கும் மேற்பட்டோர் இரவு முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலை மையமாக கொண்டு கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து நாள்தோறும் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் திருக்கரவாசலில் நடைபெற்ற விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்தில் 27.01.2019 முதல் நாள்தோறும் மாலை 6 மணி தொடங்கி காலை 6 மணி வரை காத்திருப்பு போராட்டம் நடைபெறும், இந்தப் போராட்டம் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடும் வரை நடைபெறும் என போராட்ட குழு அறிவித்திருந்தது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதன்படி திருக்கார வாசல் கடைவீதியில் போராட்ட குழு தலைவர் தியாகராஜன் தலைமையில் விவசாயிகள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளித்த மத்திய அரசையும், வேதாந்தா நிறுவனத்தையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்".