பக்கத்துவீட்டின் சுவர் இடிந்து அருகில் இருந்த குடிசை வீட்டில் விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பெண்கள்உட்பட 6 பேர் பலத்த காயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே செல்லூர் கிராமத்தைச்சேர்ந்தவர் கலியபெருமாள்.இவருக்கு சொந்தமான ஓட்டு வீடு மிகவும் பழமையானது. ஒரு வாரமாக பெய்த கனமழையின் காரணமாக இந்த ஓட்டுவீடு மிகவும் சேதமடைந்தது.
இந்நிலையில் இன்று மாலை திடீரென அந்த வீட்டில் ஒரு பக்க சுவர் சரிந்து பக்கத்தில் உள்ள கூரை வீட்டின் மேல் விழுந்தது. அப்போது அருகில் இருந்த கூரைவீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த ஆறுமுகம் வயது 65, ஆறுமுகத்தின் மனைவி அஞ்சம்மாள் வயது 48, உறவினர் சங்கீதா வயது 27,
சங்கீதாவின் 8 வயது மகன் பாலமுருகன் உள்ளிட்டோர் சுவர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்தனர்.
மேலும் அவர்களை காப்பாற்ற சென்ற கலியபெருமாளுக்கும் காயம் ஏற்பட்டது. உடனடியாக எதிரெதிர் வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளிலிருந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த ஆறுமுகத்தின் மனைவி அஞ்சம்மாள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில்பாதிப்புக்குள்ளான அவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.