Skip to main content

அரசு மருத்துவமனை கட்டுவதற்கு ஒரு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய திமுக முன்னாள் எம்.பி!

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகில் உள்ள சித்தமல்லி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏழை மக்கள் அதிகளவில் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அதிகளவில் மக்கள் வந்து செல்வதால் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேணடும் என்று சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை எழுப்பினர்.

 

 

thiruvarur government hospital dmk ex mp vijayan family donate land

 

 

இதனையடுத்து சுகாதார துறையினர் ரூபாய் 2 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து பணியை துவங்க முடிவு செய்தனர். ஆனால் தற்போது உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவுப்படுத்தி மேம்படுத்த போதிய இடமில்லை. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எதிரே உள்ள நாகை முன்னாள் எம்பியும் திமுக மாநில விவசாய அணி செயலாளருமான ஏகேஎஸ்.விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினரின் பூர்வீக சொத்தான  சுமார் ரூபாய் 40 லட்சம் மதிப்புள்ள ஒரு ஏக்கர் இடத்தை தானமாக வழங்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். 

 

 

thiruvarur government hospital dmk ex mp vijayan family donate land


அதன்படி. இன்று முறையாக இடத்தை பத்திரப்பதிவு செய்து தானமாக கொடுக்க முத்துப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ஏ.கே.எஸ்.விஜயனின் தந்தையான முன்னாள் திமுக எம்எல்ஏ ஏ.கே.சுப்பையாவின் வாரிசுகளான மனைவி சுப்பம்மாள், மகள்கள் கல்பனா, யமுனா, மகன்கள் கார்மேகம், விஜயன் ஆகியோர் இன்று வந்தனர். அங்கு திருவாரூர் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் ஸ்டேலின் மைக்கல், சுகாதார துறை உதவி திட்ட மேலாளர் அரவிந்த், வட்டார மருத்துவர் அலுவலர்கள் முத்துலட்சுமி, பிரசாந்த், கிள்ளிவளவன், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் சையயது அபுதாகிர்  ஆகியோர் முன்னிலையில் பத்திரப்பதிவு நடைப்பெற்றது.



பின்னர் தானமாக வழங்கிய இடத்திற்கான பத்திரத்தை ஏ.கே.எஸ்.விஜயன் குடும்பத்தினர் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் ஸ்டேலின் மைக்கலிடம் வழங்கினர். அப்பொழுது திமுக மாவட்ட துணைச்செயலாளர் எம்.எஸ்.கார்த்திக், மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை, கிளை செயலாளர் அய்யப்பன், அரசு மருத்துவர்கள் பத்மேஷ், ராஜீ, சுகாதார செவிலியர்கள் சாந்தகுமாரி, சுபாஸ்ரீ மற்றும் ஏகேஎஸ்.விஜயன் குடும்பத்தினர், உட்பட பலரும் உடன் இருந்தனர். 



இந்தநிலையில் அரசு மருத்துவமனை கட்ட இடம் தனமாக வழங்கிய திமுக முன்னாள் எம்பி ஏகேஎஸ்.விஜயன் குடும்பத்தினரை கிராம மக்கள் பாராட்டினர். இது குறித்து திமுக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயன் நம்மிடம் கூறும் போது தமிழ்நாட்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர் கலைஞரின் வழியில் வளர்ந்த  குடும்பம் எங்கள் குடும்பம். நம்மாள் மக்கள் பயனடைவார்கள் என்றால் அதை செய்ய வேண்டும் என்று அடிக்கடி தலைவர் சொல்வார். அதன்படி தான் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட எங்களின் குடும்பத்தின் பூர்விக சொத்தை இன்று தனமாக வழங்கியுள்ளோம்.

 

இந்த நிகழ்வு எங்கள் குடும்பத்திற்கு முழு மன நிறைவை ஏற்படுத்தியுள்ளது. எனது வீட்டை அரசு மருத்துவமனைக்கு தானமாக கொடுக்க நினைத்தேன். ஆனால் வீடு உள்பகுதியில் இருந்ததால் சாலையில் இருந்து மக்கள் இறங்கி வந்து திரும்ப செல்ல சிரமம் இருப்பதால் தான்  ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் உள்ள இந்த இடத்தை தனமாக வழங்கினோம். ஏழை மக்களுக்கு நாம் செய்யும் உதவி தான் நிலைத்திருக்கும். உங்களால் முடிந்ததை கழக தொண்டர்கள் ஏழைகளுக்கு உதவிகள் செய்ய வேண்டும் தளபதி அடிக்கடி சொல்வார். எங்கள் குடும்பத்தால் முடிந்ததை செய்திருக்கிறோம் என்றார் மகிழ்வோடு. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.