திருவாரூரில் மின் கசிவு காரணமாக பேக்கரி உட்பட 3 கடைகள் எரிந்து ரூ 10

லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.

ட்ட்

Advertisment

திருவாரூர் பழைய ரயில் நிலையம் அருகே வி.ஆர்.எம் சாலை, வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பேக்கரி கடையில் திடீர் என ஏற்பட்ட மின் கசிவு காரணமாக கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால்அதிர்ச்சியடைந்து கடையில் உள்ளவர்கள் தீ விபத்தை தடுக்கும் முயற்சியை மேற்கொண்டனர். அவர்களுக்கு உதவியாக அருகில் இருந்தவர்களும் தீயை அணைக்க முயன்றனர்.

ட்ட்

ஆனால், தீ மளமளவென பரவி அருகிலிருந்த தையற்கடை, செருப்புக் கடையென

கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள்

திருவாரூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடினர். ஒரு

மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தின்

போது பேக்கரி கடையில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடிக்காமல் பத்திரமாக மீட்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Advertisment

இந்த தீ விபத்து காரணமாக பேக்கரி, தையற்கடை, செருப்புக்கடை ஆகியவற்றில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இந்தவிபத்து குறித்து திருவாரூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.