கணவனை சுத்தியலால் அடித்து கொன்ற மனைவி: திருவாரூரில் பரபரப்பு!

"பெண்ணாக பிறந்த பாவத்திற்கு எவ்வளவு கொடுமைகள், பாவத்தை சுமக்க முடியும். எல்லாத்துக்குமே ஒரு அளவு இருக்கு, அதையும் தாண்டினா எப்படி தான் சகித்துக் கொண்டு இருக்க முடியும்" என்று கலங்குகிறார் கணவனை கொலை செய்த மனைவி.

திருவாரூர் அருகே அகரத்திருநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவர் தினமும் குடித்துவிட்டு அவரது மனைவி சித்ராவை, அடிப்பது, சூடுவைப்பது, அடுத்தவர்களோடு இழுத்துப் பேசுவது என கொடுமைப்படுத்தி வந்துள்ளார். பொறுத்து பொறுத்துப் பார்த்து விரக்தியான சித்ரா ரவியை விட்டு பிரியவும் முடிவெடுத்தார், அதற்கும் ரவி தடையாக இருந்துள்ளார்.

death

வேறு வழியில்லாமல் ரவி தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டின்பரணில்இருந்த சுத்தியலை எடுத்து வந்து தலையில் அடித்து கொலை செய்து விட்டு, திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் சரண் அடைந்தார் சித்ரா. இந்த சம்பவம் காக்கிகளை மட்டுமின்றி, பொதுமக்களையும் அதிர்ச்சிக் கலந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிறகு ரவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

killed Tamilnadu Thiruvarur
இதையும் படியுங்கள்
Subscribe