Advertisment

ஒரு நேரத்தில் இரண்டு வீட்டில் கைவரிசையை காட்டிய திருடர்கள்!

திருவாரூர் அருகே அதிமுக பிரமுகரும், ஊராட்சி மன்ற தலைவருமான ஒருவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அவரது மனைவியின் கழுத்திலிருந்த தாலி சங்கிலி 7 பவுனை கொள்ளையடித்திருப்பது பெண்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

Advertisment

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் பிலாவடி கிராமத்தின் மெயின் ரோட்டில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இவரது மனைவி ராணி, குடவாசல் வீட்டு வசதி சங்க இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

Advertisment

thiruvarur district thief police investigation

இந்நிலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது விடியற்காலை அவரது வீட்டின் பின்பக்க கதவை மர்ம நபர் உடைத்து தூங்கிக்கொண்டிருந்த ராணியின் கழுத்திலிருந்த தாலிசங்கிலி 7 பவுனை அறுத்துள்ளனர். ராணியோ அலறியடித்துக்கொண்டு கூச்சலிட அவரது கணவர் எழுந்து பார்த்தவுடன் ஜெயின் பறித்த மர்மநபர்கள் ஓடிவிட்டனர்.

உடனடியாக குடவாசல் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தான். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராதாகிருஷ்ணனின் பக்கத்து வீடான ராஜேந்திரன் என்பவர் வீட்டிலும் 7 கிராம் மோதிரமும் 5500 ரூபாய் பணத்தையும் திருடிவிட்டே ராதாகிருஷ்ணனின் வீட்டில் கைவரிசையை காட்டியிருக்கின்றனர்.

ஒரே நேரத்தில் இரண்டு வீடுகளிலும் திருட்டு சம்பவம் நடந்திருப்பது, அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Police investigation thief Thiruvarur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe