திருவாரூர் மாவட்டம் வடகண்டம் வெட்டாற்றில் குளிக்க சென்ற ஜெயசீலன்(13) என்ற சிறுவன் நீரில் மூழ்கி மாயம். நீரில் மூழ்கி மாயமான சிறுவனை தேடும் பணியில் தீயணைப்பு துறை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நேற்று மட்டும் திருவாரூரில் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

thiruvarur district river 10th student incident police

Advertisment

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக மேட்டூர் அணை நேற்று நிரம்பிய நிலையில், தற்போது அணைக்கு நீர்வரத்து 40,000 அடியாக உள்ளது. இந்நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்படுவதால், திருவாரூரில் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது உடைமைகள் மற்றும் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்து செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் ஆறுகளில் குளிக்கவோ, செல்பி எடுக்கவோ திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

Advertisment