அரசு பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் கை கலப்பாக மாறி ஒரு மாணவனுக்கு ஏழு இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. திருவாரூர் அருகே உள்ள அடியக்கமங்கலம் அரசுப்பள்ளி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதில் பைசல் என்கிற பதினோராம் வகுப்பு மாணவரை மற்ற மாணவர்கள் கத்திரிக்கோலால் ஏழு இடங்களில் குத்தியதில் படுகாயம் அடைந்த பைசல், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

thiruvarur district one of the school students gang fight

இந்த சம்பவத்தில் தொடர்புடைய செல்வேந்திரன் என்கிற (16) மாணவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர் திருவாரூர் தாலுக்கா காவல்துறையினர். இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெருத்த அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது. மாணவ சமூகம் கல்வியை கடந்து எங்கு செல்கிறது என்கிற அச்சம் பலருக்கும் ஏற்படும் விதமாக அடுத்தடுத்த சம்பவங்கள் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது.