Advertisment

வாயில் மலம் திணித்து துன்புறுத்திய விவகாரம்;  குற்றம் நிரூபிக்கப்பட்டால் குண்டர் சட்டம் பாயும்-  மாவட்ட எஸ்.பி. துரை

k

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே திருவண்டுதுறை கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டியல் சமுகத்தைச்சேர்ந்த கொல்லிமலை என்பவர் மீது சிறுநீர் கழித்து, வாயில் மலம்திணித்து துன்புறுத்திய புகாரின் பேரில் இருவரை கைது செய்யப்பட்டுள்ளது காவல்துறை. மேலும் ஒருவரை தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் கூறியுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் குண்டர் சட்டம்பாயும் என்றிருக்கிறார் மாவட்ட எஸ்,பி துரை.

Advertisment

k

இது குறித்து அவர், ‘’திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கடந்த 28-04.19 அதிகாலையில் இரு தனிப்பட்ட நபர்களுக்கு இடையேயான வயல்வெளி தொடர்பான பிரச்சனை காரணமாக கொல்லிமலை என்பவர் முத்து, ராஜ்குமார், ராஜேஷ் ஆகியோர் தன்னை ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார்.

Advertisment

k

புகாரை பெற்றுக் கொண்ட கோட்டூர் காவல் துறையினர் அன்றைய தினமே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, புகாரில் கொடுக்கப்பட்ட மூன்று நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அதில் முத்து, ராஜேஷ் ஆகிய இரண்டு பேரை அன்றைய தினமே கைது செய்தனர். மேலும் ராஜ் குமாரை தேடி வருகின்றனர்.

k

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இரு பிரிவினருக்கிடையே முன்பகை ஏற்கனவே இருந்து வருகிறது. மூன்றாவது குற்றவாளியான ராஜ்குமார் என்பவரை கைது செய்வதற்கு கோட்டூர் காவல் ஆய்வாளர் மற்றும் திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி தலைமையில் குழு அமைத்து விசாரித்து வருகின்றனர். அதிலும் ராஜ்குமார் கல்லூரி மாணவன், சம்பவத்தின் போது அங்கிருந்தானா, கல்லூரியில் இருந்தானா என்பது குறித்து விசாரிக்கப்படும், மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குண்டர் சட்டம் பாயும்," என்றார்.

k

kottur Thiruvarur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe