Skip to main content

போலீசாருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்!!!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

 

thiruvarur district husband and wife incident police investigation

 

 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே புதுக்குடி, அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜெயகாந்த். இவரது மனைவி தேவிகா. இவர்கள் மன்னார்குடி அருகே வாய்கால் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். தேவிகா மன்னார்குடி அரசு கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார்.  

 

இந்நிலையில் தேவிகாவின் செல்போனுக்கு அடிக்கடி கால் வருவதும், வாட்ஸ் ஆப் மெசேஜ் வருவதுமாக இருந்ததைக் கண்டு  சந்தேகமடைந்த  கணவர் ஜெயகாந்த் தேவிகாவின் செல்போனை அவருக்கு தெரியாமல் பார்த்துள்ளார். அதில் தேவிகாவின் சகோதரர் முருகேசன் தேவிகாவின் செல்போனுக்கு ஆபாசமாக படங்கள் அனுப்பி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை கண்டு ஆத்திரமடைந்த ஜெயகாந்த் அது குறித்து தேவிகாவிடம் கேட்டுள்ளார்.

 

இதனால் கோபமடைந்த தேவிகாவும், அவரது சகோதரர் முருகேசனும், முரளிதரனும் சேர்ந்து ஜெயகாந்தை கட்டி வைத்து துன்புறுத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிய ஜெயகாந்த் மன உளைச்சலுக்கு ஆளாகி இனி வாழக்கூடாது என விரக்தியடைந்து, கடிதம் ஒன்றை எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

 

அந்த கடிதத்தில் "தேவிகாவும் அவரது சகோதரர் முருகேசனும் தகாத உறவு வைத்திருந்ததாவும், அதை தெரிந்து கொண்ட என்னை கொலை செய்யும் நோக்கத்தோடு தேவிகாவும், அவரது சகோதரர் முருகேசனும், முரளிதரன் என்பவரும் கொடூரமாக தாக்கினர், இதனால் மன உளைச்சல் அடைந்துவிட்டேன். என்னை தற்கொலைக்கு தூண்டியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தனது பெயரில் உள்ள வீட்டிற்கு தனது அம்மா மற்றும் அப்பா ஆகியோருக்கு மட்டுமே உரிமை உள்ளது, வேறு யாருக்கும் உரிமை கிடையாது" என திருமக்கோட்டை காவல் ஆய்வாளருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திருமக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு கல்லூரி முதல்வர் மீது வழக்குப்பதிவு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
case filed against suspended govt college principal

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்தவர் கீதா. இவர் கடந்த சில ஆண்டுகளாக தமிழக கல்லூரிக் கல்வி இயக்குநராகவும் பொறுப்பு பதவி வகித்து வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிதி மோசடி மற்றும் நிர்வாக சீர்கேடு காரணமாக எழுந்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் பொறுப்பில் இருந்து கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து நேற்று முன்தினம் (01.02.2024) இவர் மீண்டும் கல்லூரியின் முதல்வராக பதவியேற்றார். அதே சமயம் தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் தனராஜன், திரு.வி.க. அரசு கல்லூரிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் முதல்வர் கீதாவை பணியிடை நீக்கம் செய்து தனராஜன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் மோசடி புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருவிக கல்லூரி முதல்வர் கீதா மீது அரசு ஆவணங்களை கிழித்ததாகவும், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் தஞ்சை மண்டல கல்லூரி இணை இயக்குநர் தனராஜன் புகார் தெரிவித்துள்ளார். இதனயடுத்து கீதா மீது 5 பிரிவுகளின் கீழ் திருவாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.