Advertisment

திருவாரூர் தேர் அழகை ரசித்த கனிமொழி!

cae

Advertisment

திமுக எம்.பி கனிமொழி நேற்று திருவாரூர் மாவட்டத்தில் மகளிர் ஆய்வு கூட்டத்திற்கு சென்றிருந்தார். அவர் சென்ற பணிகள் முடிந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் ரூசோ இல்ல திருமணத்திற்கு செல்ல இருந்தார். அதற்காக திருச்சிக்கு கிளம்பியவர் திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரடிக்குச் சென்று தேரின் நேர்த்தியான வேலைப்பாடுகளையும் அழகையும் ரசித்து பார்த்தார்.

இத்தனை கலை நயம் தமிழனுக்கு தான் தெரியும் என்று வியந்து பார்த்தார். அப்போது கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி பக்தர்களும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

திராவிட இயக்கத்தை சேர்ந்த கனிமொழி எம்.பி கோயிலுக்கு..? என்ற கேள்விக்கு, கோயிலுக்கும் தேருக்கும் தரிசனம் செய்ய வரவில்லை அதில் உள்ள கலை நயத்தை பார்க்கத்தான் வந்தார். கலை மீதான பற்று தான் காரணம். அவர் எப்பவும் திராவிடம் தான் என்றனர் உடன் இருந்தவர்கள்.

thirvarur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe